மின்னஞ்சல்: cmr.dotex@tn.gov.in | தொடர்புக்கு:+91 - 44 - 45020047


துணிநூல் இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம்( Guidance Tamil Nadu), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் தமிழகத்தின் பல்வேறு தொழில்துறையினரின் பிரதிநிதிகளைக் கொண்ட 15 பேர் குழு, 06.04.2025 முதல் 11.04.2025 வரை கம்போடியா மற்றும் வியட்நாமுக்கு அலுவலக பயணம் மேற்கொண்டனர்.

கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம், இந்தியாவில் உள்ள கம்போடியா தூதரகம் ,TAFTC, கம்போடியா மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII)ஆகியோருடன் இணைந்து தமிழக அரசு கம்போடியாவில் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் கூட்டத்தை (Buyer Seller Meet) நடத்தியது.

வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரத்தில் (Ho Chi Min City) நடைபெற்ற Saigon Tex 2025 கண்காட்சியில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரங்கத்தினை( Tamil Nadu Pavilion) வியட்நாமிற்கான இந்திய தூதர், மற்றும் துணிநூல் துறை இயக்குநர் அவர்களால் 09.04.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டது.




இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து தமிழக அரசு வியட்னாமில் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் கூட்டத்தை (Buyer Seller Meet) நடத்தியது.

