மின்னஞ்சல்: cmr.dotex@tn.gov.in | தொடர்புக்கு:+91 - 44 - 45020047
கூட்டுறவு நூற்பாலைகள்
நூற்புத் தொழில்
நூற்பு என்பது பஞ்சினை நூலாக மாற்றும் செயல்முறையாகும். நூலானது நெசவு மற்றும் பின்னல்ஆடைக்கான மூலப்பொருளாகும். தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நூற்பானது பல்வேறு தொழில்நுட்பங்களைக்கொண்டது. அதில் முதன்மையானது Ring ஸ்பின்னிங் மற்றும் Open -end/Rotor spinning ஆகிய இரு நூற்பு தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த நூற்பாலைகளில் 55% நூற்பாலைகள் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ளது. இதில் 43% நூற்பு கதிர்கள் நூற்பு இயந்திரங்களிலும் 60% நூற்பு கதிர்கள் ரோட்டார் நூற்பு இயந்திரங்களிலும் கொண்டு இந்தியாவில் தமிழ்நாடு நூல் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவிலேயே நூற்பு கதிர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தாலும், பழைய இயந்திரங்களைப் பயன்படுத்துவதால், நாட்டின் மற்ற பகுதிகளை விட தமிழ்நாட்டில், நூல் உற்பத்தித் திறன் (Productivity) குறைவாகவே உள்ளது.
துணிநூல் துறையில் முக்கிய தொழில்களான நெசவு மற்றும் பின்னலாடை தொழில்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நூற்பு துறையிலும் அதிக அளவில் தொழில்நுட்பங்களை புகுத்தி உற்பத்தி மற்றும் தரத்தினை மேம்படுத்தி நூற்புத் தொழிலை நிலைநிறுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே ஜவுளித்துறைக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கு நிதி உதவி தேவைப்படுகிறது. அதனை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடுஅரசின் "தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை 2024" திட்டத்தின் கீழ் பழமையான இயந்திரங்களை நவீனப்படுத்த நூற்பாலைகளுக்கு 6% வட்டி மானியம் வழங்கப்பட உள்ளது.
தற்போது கீழ்கண்ட 6 கூட்டுறவு நூற்பாலைகள் 1.18 இலட்சம் நூற்பு கதிர்கள் திறனுடன் இயங்கி வருகின்றன.
அண்ணா கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், ஆண்டிபட்டி, தேனி.
பாரதி கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், எட்டயபுரம்.
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், ஆரல்வாய்மொழி.
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், அறந்தாங்கி.
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், அச்சங்குளம், இராமநாதபுரம்.
கூட்டுறவு நூற்பாலைகளின் இருப்பு விவரங்கள்
Viewing all 10 vendors

No number yet
Aundipatti, Theni., India

No number yet
Ettayapuram, Thoothukudi., India

No number yet
Aralvaimozhi, India

No number yet
Aranthangi, India

No number yet
Uthangarai, India

No number yet
Achankulam, India
கூட்டுறவு நூற்பாலைகளின் விவரங்கள்
வ.எண் | கூட்டுறவு நூற்பாலைகளின் பெயர் | நிறுவப்பட்ட நூற்பு கதிர்கள் | உற்பத்தி திறன்/நாள் (M.T) | 100 கிலோ நூல் (HOK) உற்பத்தி செய்ய தேவைப்படும் இயக்க நேரம் (Operatives Hours) |
1000 நூற்பு கதிர்களுக்கு தேவையான நபர்களின் எண்ணிக்கை (Operatives per 1000 spindles) OHS |
---|---|---|---|---|---|
1 | அண்ணா கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், ஆண்டிபட்டி, தேனி | 24,192 | 8.17 | 12 | 1.65 |
2 | பாரதி கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், எட்டயபுரம். | 18,144 | 6.12 | 12 | 1.65 |
3 | கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலைலிமிடெட், ஆரல்வாய்மொழி. | 22,800 | 7.70 | 12 | 1.65 |
4 | புதுக்கோட்டை மாவட்டம் கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், அறந்தாங்கி. | 20,976 | 7.08 | 12 | 1.65 |
5 | கிருஷ்ணகிரி மாவட்டம் கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், ஊத்தங்கரை | 20,160 | 6.81 | 12 | 1.65 |
6 | இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், அச்சங்குளம், இராமநாதபுரம் | 12,096 | 4.08 | 12 | 1.65 |
7 | மொத்தம் | 1,18,368 |
பல்வேறு வகையான நூல் விவரங்கள்
வ. எண் | பல்வேறு நூல் விவரங்கள் | குறிப்புகள் | ||
---|---|---|---|---|
சிட்டா (பேல்கள்) | கோன் (பைகள்) | |||
1 | 20s k | 20s k | அனைத்து கூட்டுறவு நூற்பாலைகளும் உற்பத்தி செய்கின்றன | |
2 | 26s k | 26s k | ||
3 | 30s k | 30s k | ||
4 | 40s k | 40s k | ||
5 | 60s k | 60s k | ||
6 | 2/17 nfk | 2/17 nfk | ||
7 | 2/30s k | 2/30s k | ||
8 | 2/40s k | 2/40s k | ||
9 | 60s C | 60s C | அண்ணா, பாரதி கூட்டுறவு நூற்பாலைகள் மட்டுமே உற்பத்தி செய்கின்றன. | |
10 | 2/60s | 2/60s |
நூல் விற்பனை விவரங்கள்
வ.எண் | விவரங்கள் | விற்பனை விவரங்கள் |
---|---|---|
1 | தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகம் மூலமாக கைத்தறி துறையில் இயங்கும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. | அனைத்து வகையான சிட்டா நூல்கள் |
2 | வெளிச்சந்தை | 40s k கோன் |
3 | சீருடை வழங்கும் திட்டம் | 2/40s k பாலிஸ்டர்/ காட்டன் |
4 | வேட்டி சேலை வழங்கும் திட்டம் | 40sk கோன், 40s k சிட்டா, 60s k கோன், 60s கலர் நூல் |
5 | தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் | 2/40s k பாலிஸ்டர் காட்டன் |