சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டம்

தமிழ்நாடு ஜவுளித் துறை பாரம்பரியம் மற்றும் புதுமை, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தன்னகத்தே கொண்டு உலக அளவில் தமிழ்நாட்டின் ஜவுளித் தொழில் முக்கியத்துவத்தினை முன்னிறுத்துவதற்கான உகந்த சூழலையும், தேவையான கட்டமைப்புகளையும் கொண்ட முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

திட்டமிட்ட முன்னெடுப்புகள் மற்றும் & இலக்குகள்

இந்தியாவின் முதன்மையான ஜவுளித் தளமாக தமிழகத்தின் நற்பெயரை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கு திட்டமானது, தொழில்முனைவோருக்கு நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் ஜவுளித் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவி, ஜவுளித்துறையில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதோடு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்புச் செலவில் அதிகபட்சமாக ரூ.2.50 கோடிக்கு உட்பட்டு தகுதியான திட்டச் செலவில் 50% நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தொழில் சங்கங்கள், தொழில் முனைவோர் குழு மற்றும் சங்கங்கள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் முக்கிய பங்கேற்பாளர்கள் ஆவர். குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் வைத்திருப்பதே இத்திட்டத்தின் கீழ் பயனடைய தேவையான தகுதியாகும். இத்திட்டத்தின் கீழ் பொது உட்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் உற்பத்தி நோக்கங்களுக்காக தொழிற்சாலை கட்டிடங்கள் ஆகிய திட்டக் கூறுகளின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டினை இந்தியாவின்

முக்கிய ஜவுளி மையமாக மாற்றுதல்

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தினை மேம்படுத்தும் பொருட்டு ஜவுளித் துறை சார்ந்த தொழில்முனைவோர்களுடன் கலந்தாலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கூட்டங்கள் உள்ளிட்ட அரசின் இடையறாத தொடர்முயற்சிகள் காரணமாக ஜவுளித் தொழில் முனைவோர்கள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்..

தமிழ்நாட்டினை "இந்தியாவின் ஜவுளி மையப்புள்ளியாக” மாற்றுவதே இத்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையாகும். இந்த மாற்றம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுப்பதன் மூலம் நாட்டின் ஜவுளித் துறை வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

நிதி உதவி & திட்டக் கூறுகள்

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டம் தகுதியான திட்டச் செலவில் 50% வரை, அதிகபட்ச வரம்பு ரூ.2.50 கோடி வரை நிதியுதவி அளிப்பதால் தொழில்முனைவோரை ஈர்க்கும் வகையில் உள்ளது. இக்கணிசமான நிதியுதவியானது மண்டலங்களில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதோடு, சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களின் விரைவான செயலூக்கியாக விளங்குகிறது.

பொதுவான உட்கட்டமைப்பு, பொதுவான வசதிகள் மற்றும் உற்பத்தியை நோக்கமாகக் கொண்ட தொழிற்சாலை கட்டிடங்கள் ஆகியவை அரசின் மானியத்தினை பெறுவதற்கு தகுதியான திட்டக் கூறுகளாகும். இம்முழுமையான அணுகுமுறையானது, ஜவுளிப் பூங்காவின் உட்கட்டமைப்பானது நவீனமாகவும், வளமான வளர்ச்சிக்கு உகந்ததாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்திற்கான வழிகாட்டுதல்களைப் பெறுங்கள்

G.O No 97

Download

MTP.G.O.131

MTP.G.O.195

G O M S.No 195 Dt 14

Let’s Get In Touch


    -+=