மின்னஞ்சல்: cmr.dotex@tn.gov.in | தொடர்புக்கு:+91 - 44 - 45020047
பி எம் மித்ரா
ஜவுளி மதிப்பு சங்கிலியை மாற்றுதல்
பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆயத்த ஆடைப் பூங்காக்கள் (பி.எம்.மித்ரா) திட்டம் என்பது, நூற்பு மற்றும் நெசவு முதல் பதப்படுத்துதல் மற்றும் ஆடை உற்பத்தி வரை, அனைத்து ஜவுளி மதிப்பு சங்கிலியையும் சீராக்குவதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்கு முன்முயற்சியாகும். இந்த லட்சியத் திட்டம், குறிப்பிட்ட மண்டலங்களின் உள்ளார்ந்த பலத்தைத் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் அதே வேளையில், ஜவுளித் தொழில் புதிய உச்சத்தை எட்டுவதற்கான முன்னெடுப்பாக உள்ளது.
முன்னோடி
ஜவுளித் துறையில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு, பி.எம் மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளிப் பூங்காவைத் தொடங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. ரூ.2,000 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம் ரூ.19000 கோடி அளவிற்கு குறிப்பிடத்தக்க முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முயற்சியானது 2 லட்சத்துக்கும் அதிகமான தனிநபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும்,
சிறப்புமிகு தருணம்
22 மார்ச் 2023 அன்று சென்னையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அவர்கள் கூட்டாக இணைந்து துவக்கிய PM மித்ரா பூங்கா திறப்பு விழா ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது, இந்த சிறப்புமிக்க திட்டத்திற்கான முதன்மை உருவாக்குநராக தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) விளங்குகிறது. இந்த கூட்டாண்மையானது தொழில்துறை வளர்ச்சியை வளர்ப்பதற்கும் முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும் மாநில அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
பி எம் மித்ரா திட்டத்தின் வெற்றிக்கான ஒருங்கிணைப்பு
பி எம் மித்ரா திட்டத்தின் முழுத் திறனையும் வெளிக்கொள்வதில் தேசிய மற்றும் சர்வதேச ஜவுளித் தொழில் நிறுவனங்ளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை ஒருங்கிணைக்க ஜவுளித் துறை முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முக்கிய தொழிமுனைவேர்களின் தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம், அதிநவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக, அந்நிய நேரடி முதலீட்டைத் ஈர்ப்பதோடு, ஜவுளித் துறையில் உள்ளூர் முதலீடுகளை ஊக்குவிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை உட்கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட்ட பி எம் மித்ரா பூங்கா மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் புதுமையை ஈர்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவானது ஜவுளித் துறையில் உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் கணிசமான அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நன்முறையில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டம் ஆசியாவின் முக்கிய ஜவுளி மையமாகத் திகழ வேண்டும் எனும் தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வையை எட்டுவதற்கு ஜவுளித் தொழிலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஜவுளித் தொழில் மேலாதிக்கத்திற்கான தமிழ்நாட்டின் பயணம்
சுருக்கமாக, தமிழகத்தில் தொடங்கப்பட்ட பி எம் மித்ரா பூங்காவானது தொடங்கப்பட்டது, ஜவுளி ஆற்றல் மையமாக மாறும் மாநிலத்தின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஜவுளி மையம் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதாகவும், கணிசமான முதலீடுகளை உருவாக்குவதாகவும், ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும், தமிழ்நாட்டின் பொருளாதார செழுமைக்கு பங்களித்து, உலக அரங்கில் தொழில் முன்னோடி என்ற நற்பெயரை வலுப்படுத்துவதாகவும் உறுதியளிக்கிறது.