மின்னஞ்சல்: cmr.dotex@tn.gov.in | தொடர்புக்கு:+91 - 44 - 45020047
துணிநூல் துறை
தமிழ்நாட்டின் ஜவுளித் துறையில் புதுமை, நிலைப்புத் தன்மை மற்றும் சிறந்து விளங்குவதற்கான உலகளாவிய அங்கீகாரத்தை அடைதல்.
துணிநூல் துறை தமிழ்நாட்டில் ஜவுளித் தொழிலின் செறிவை அதிகரிப்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. நீண்ட பாரம்பரியம், புதுமை புகுத்தல், நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழ்நாட்டு ஜவுளித் தொழிலை உலக அளவில் முக்கியத்துவம் பெறுவதற்கான சூழலை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் முக்கியமான ஜவுளி குழுமங்கள்
ஆயத்த ஆடைகளுக்கான முக்கிய குழுமம்.
இங்குள்ள துறைமுகம், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி பொருட்களை இறக்குமதி / ஏற்றுமதி செய்ய உபயோகமாக உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நூற்பு குழுமம்.
நாட்டின் முக்கிய நூல் உற்பத்தி மையம்.
தொழில்நுட்ப ஜவுளிக்கான 2 உயர்திறன் மையம்( centre of excellence)
நெசவுக்கான முன்னணி குழுமம்
பதனிடுதல் மையம்
பட்டுப் புடவைகளுக்கான குழுமம்
வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் உற்பத்தி மையம்.
உலகின் முன்னணி ஜவுளி விற்பனை நிலையங்களுக்கான ஜவுளி பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது.
திறமையான பணியாளர்களை அதிகப்படியாக ஈர்த்துள்ளது.
வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் உற்பத்தி குழுமம்
ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் குழுமம்.
ஆயத்த ஆடை உற்பத்தியின் முக்கிய குழுமம்.
இந்தியாவின் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்திக்கான மிகப்பெரிய குழுமம்.
6000-க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனம் உள்ளன.
பதனிடும் தொழிலின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றாகும்.
நூற்பாலைகளின் முன்னணி குழுமம்.
ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் குழுமம்.
நூற்பாலைகளின் முன்னணி குழுமம்.
ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் குழுமம்.
தகவலைப் பெறுங்கள் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்.
அறிவிப்புகள்
2024-25க்கான பட்ஜெம் அறிவிப்பின்படி, 2024-25ம் ஆண்டிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி அனுமதித்து உள்ளது.
தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2024 அமல்படுத்தப்படும்.
ஆராய்ச்சி மற்றும் வணிக மேம்பாட்டின் நிதியிலிருந்து ரூ 25 கோடி மதிப்பீட்டில் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் செயற்கை இழையின் புதிய ஜவுளி பொருட்கள் தயாரிப்பதற்கு மானியமாக வழங்கப்படும்.
ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஜவுளி பொருட்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் கரூர், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 10 சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அரசால் அமைக்கப்படும்.
Tenders
தமிழ்நாடு அரசின் துணிநூல் துறையின் உதவியுடன் உங்கள் வணிகத்தை மேம்படுத்துங்கள்.
எங்கள் முன்னெடுப்புகளை ஆராய்ந்து, எங்கள் ஜவுளி கொள்கையினை தெரிந்து கொள்ளுங்கள்.
தொழில்நுட்ப ஜவுளி மேம்பாடு
ஜவுளித் தொழிலில் புதுமையை ஆதரிக்கும் பொருட்டு தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவில் புதிய பொருள் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவித்தல்.
விரிவான திட்டங்கள்
தமிழ்நாட்டின் மொத்த ஜவுளி மதிப்பு தொடரினை வளர்க்கவும், உட்கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு மற்றும் இயந்திரங்கள் கொள்முதல் ஆகியவை உள்ளடக்கிய ஜவுளி தொழில்களுக்கு மானியம் வழங்க ஏதுவாக துணிநூல் துறை விரிவான திட்டங்களை கொண்டுள்ளது.
கூட்டாண்மையை உருவாக்குதல்
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளியை உள்ளடக்கிய ஜவுளித் தொழிலை விரிவுபடுத்தவும், கூட்டாண்மையை மேம்படுத்தவும், ஆலோசனை சேவைகள் மூலம் பயிலரங்கங்களை நடத்தி அறிவை பகிர்ந்து கொள்வதற்கும் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆராய்ச்சியாளர்கள் முதலீட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் ஏதுவாக நாங்கள் தகவல்களை வழங்குகிறோம்.
தகவலைப் பெறுங்கள்
ஜவுளி தொழிலின் தற்போதைய நிலவரம் உலகளாவிய சந்தையின் தேவைகள், வியாபாரத் தொழில், முதலீட்டு யுக்தி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் தகவல்களை வழங்குகிறோம்.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு
துணிநூல் துறை செயல்படுத்தப்படும் திட்டங்களிலும், டென்டர் நடவடிக்கைகளிலும், கொள்கை உருவாக்குவதிலும் மற்றும் குறைதீர்க்கும் அமைப்பிலும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
பாதுகாப்பு தொழில்நுட்ப ஜவுளி பிரிவு (புரோடெக்)
பாதுகாப்பு தொழில்நுட்ப ஜவுளி பிரிவின் தயாரிப்புகள் பணியாளர்கள் மற்றும் அவர்களின் உடைமையை பாதுகாக்கும் பொருட்டு பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு ஜவுளிப் பொருட்களை இராணுவ பணியாளர்கள் காவல் துறை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், துணை இராணுவ படையினர், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு பணியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
போக்குவரத்து தொழில்நுட்ப ஜவுளி பிரிவு (மொபில்டெக்)
போக்குவரத்து தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவில் ஜவுளி தயாரிப்புகளான தரை மார்க்கமான பல்வேறு ரக வாகனங்கள், ஆகாய விமானங்கள், படகுகள், செயற்கைக்கோள்கள், விண்வெளி ஊர்திகள் ஆகியவற்றில் பயன்படுகிறது. முக்கியமான போக்குவரத்து தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புகள் இருக்கை பட்டை, காற்றுப்பை, தலைக்கவசம், நைலான் பட்டை வானூர்தி கழிவு பொருட்கள் ஆகியவை ஆகும்.
மருத்துவ தொழில்நுட்ப ஜவுளி பிரிவு (மருத்துவம்)
மருத்துவ தொழில்நுட்ப ஜவுளி பிரிவு சுத்தம் மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் ஜவுளி பொருட்களைக் கொண்டுள்ளது. இப்பிரிவில் டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள், அறுவை சிகிச்சை பொருட்கள், முகக்கவசம், செயற்கை உள்வைப்புகள், PPEகிட்கள் மற்றும் மருத்துவர்களுக்கான அறுவை சிகிச்சை ஆடைகள் ஆகியவைகள் அடங்கும்.
இண்டுடெக்
வடிகட்டுதல், அனுப்புதல், தயாரிப்புகளை சுத்திகரித்தல் மற்றும் பிற தொழில்துறை பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஜவுளி தயாரிப்புகள் இண்டுடெக் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. எனவே, இண்டுடெக் ஃபில்டர்கள், கன்வேயர் பெல்ட்கள், டிரைவ் பெல்ட்கள், போல்டிங் துணி, கணினி பிரிண்டர் ரிப்பன்கள் மற்றும் காகிதம் தயாரிக்கும் துணிகளை உள்ளடக்கியது.
விவசாயம், தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் வன ஜவுளி (அக்ரோடெக்)
அக்ரோடெக் பிரிவில் விவசாயம், தோட்டக்கலை (மலர் வளர்ப்பு உட்பட), மீன்பிடி, கால்நடை பராமரிப்பு, வனவியல் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஜவுளி பொருட்கள் அடங்கும். அக்ரோடெக் தயாரிப்புகள் கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களிலிருந்து பயிர்கள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் உதவுகின்றன.
ஜியோடெக்
இப்பிரிவில் பொருட்கள் ஊடுருவக்கூடியவை மற்றும் மண் வலுவூட்டல், பிரித்தல், வடிகட்டுதல், வடிகால் மற்றும் மண் அரிப்பு தடுப்பான் போன்ற பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜியோடெக் பிரிவில் உள்ள தயாரிப்புகள், சாலைகள், ரயில் பாதைகள், அணைகள், நீர்வேலைகள் போன்றவற்றில் நெய்யப்படாத, நெய்த மற்றும் பின்னப்பட்ட வடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றன, இந்த பிரிவில் உள்ள முக்கிய தயாரிப்புகள் ஜியோக்ரிட்ஸ், ஜியோனெட்டுகள் மற்றும் ஜியோகாம்போசிட்டுகள்.
ஸ்போர்ட்டெக்
விளையாட்டு உடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர் செயல்திறன் கொண்ட ஜவுளிப் பொருட்கள் இந்த வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில ஸ்போர்ட்டெக் தயாரிப்புகள் செயற்கை தரைகள், விளையாட்டு வலைகள், மீன்பிடி கம்பிகள், பலூன் துணிகள், பாராசூட் துணிகள், ஹாக்கி குச்சிகள், ராக்கெட்டுகள் மற்றும் பாய்மர துணிகள் ஆகியவை ஆகும்.
கட்டுமான தொழில்நுட்ப ஜவுளி பிரிவு (பில்ட்டெக்)
கட்டிடம் மற்றும் கட்டுமான துறையில் பயன்படுத்தப்படும் ஜவுளி தயாரிப்புகளை கொண்டது. கட்டுமான தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில், கட்டுமான ஜவுளி பொருட்கள் கட்டடக் கலை சவ்வுகள் தார் பாலின்கள் / கேன்வாஸ் மற்றும் HDPE விதானங்கள் காப்பு உறைகள், சுவர் உறைகள், சாரக்கட்டு வலைகள் மற்றும் கேட்பொலி ஒழுங்குபடுத்தி ஜவுளி பொருட்கள் ஆகியவற்றை கொண்டது.
பேக்டெக்
இந்த பிரிவில் தொழில்துறை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் பேக்கேஜிங்கில் பயன்பாடுகளுக்காக தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் உள்ளன.
க்ளோத்டெக்
க்ளாத் டெக் பிரிவில் ஜவுளி பொருட்கள் மற்றும் துணிகளை உற்பத்தி செய்வதற்கான தேவைப்படும் பொருட்களைக் கொண்டுள்ளன. ஷூலேஸ்கள், இன்டர்லைனிங்ஸ், ஜிப் ஃபாஸ்டென்னர்கள், எலாஸ்டிக் ஃபேப்ரிக், கார்மென்ட்ஸ் மற்றும் குடை துணி ஆகியவை இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சில முக்கிய தயாரிப்புகள் ஆகும்.
வீட்டு உபயோக தொழில்நுட்ப ஜவுளி பிரிவு (ஹோம்டெக்)
தளவாடங்கள், வீட்டு ஜவுளிகள், தரை உறைகள் போன்றவற்றின் தொழில்நுட்ப கூறுகள் ஹோம்டெக் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஹோம்டெக் பிரிவில் உள்ள பிற முக்கிய தயாரிப்புகளில் ஃபைபர்ஃபில், மெத்தை மற்றும் தலையணை உறைகள், கார்பெட் பேக்கிங் துணி, அடைத்த பொம்மைகள் மற்றும் பிளைண்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்ப ஜவுளி பிரிவு (ஓகோடெக்)
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜவுளி பொருட்கள் ஓகோடெக் தயாரிப்புகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஓகோடெக் தயாரிப்புகள் அரிப்பு கட்டுப்பாடு, காற்று மற்றும் நீர் சுத்திகரிப்பு, கழிவு மறுசுழற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
சிறிய ஜவுளி பூங்கா
உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக தொழில்முனைவோரை ஊக்குவித்து, அதிக முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் மாநிலத்தில் ஜவுளித் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உறுதி செய்தல்.
தமிழ்நாடு பெவிலியன்
தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கு ஒரு தளத்தை வழங்குவதற்காக, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெறும் குளோபல் சோர்சிங் எக்ஸ்போ’ 2023 இல் 20 கண்காட்சியாளர்களுடன் தமிழ்நாடு பெவிலியனை ஜவுளித் துறை அமைத்துள்ளது.
செய்திகள் & தற்போதைய நிகழ்வுகள்
திறப்பு விழா
“திறப்பு…
எங்களை தொடர்பு கொள்ள
துணிநூல் ஆணையர் அலுவலகம்
34, கதீட்ரல் கார்டன் சாலை, HEPC கட்டடம்,
நுங்கம்பாக்கம், சென்னை 600 034.
044-45020049
commr.tex@gmail.com
மண்டல துணை இயக்குநர் , கரூர்
மண்டல துணை இயக்குநர் அலுவலகம்,
30/3, நாவலடியான் வளாகம் 1வது தளம்,
திண்டுக்கல் மெயின் ரோடு, தாந்தோன்றிமலை, கரூர்-639 005.
04324 - 299544
rddtextileskarur@gmail.com
மண்டல துணை இயக்குநர், திருப்பூர்
மண்டல துணை இயக்குநர் அலுவலகம்,
502, 505 மற்றும் 508, ஐந்தாவது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை வளாகம், திருப்பூர்-641 604.
0421-2220095
rddtextilestpr@gmail.com
மண்டல துணை இயக்குநர், சேலம்
மண்டல துணை இயக்குநர் அலுவலகம்,
1A-2/1, சங்ககிரி மெயின் ரோடு,
குகை, சேலம்-636 006.
0427-2913006
ddtextilelessalemregional@gmail.com
மண்டல துணை இயக்குநர், மதுரை
மண்டல துணை இயக்குநர் அலுவலகம்,
எண்.39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு,
மதுரை - 625 014.
0452-2530020
ddtextilesmdu@gmail.com