தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகளின் இணையம்

தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகளின் இணையம் லிமிடெட் (டான்ஸ்பின்) சென்னை (2023 - 24)

தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகளின்‌ இணையம்‌ (டான்ஸ்பின்‌), கூட்டுறவு நூற்பாலைகளின்‌ பஞ்சு கொள்முதல்‌ நடைமுறையினை முறைப்படுத்தும் பொருட்டு, டிசம்பர்‌ 1994-ஆம்‌ ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்விணையத்தின்‌ முக்கிய நோக்கம்‌, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு நூற்பாலைகளுக்கும்‌ தேவையான தரமான பஞ்சினை, நியாயமான விலையில்‌ நாடு முழுவதும்‌ உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள்‌, இணையங்கள்‌, இந்திய பஞ்சுக் கழகம்‌ மூலம்‌ கொள்முதல்‌ செய்து விநியோகிப்பதாகும்‌. இதற்காக, தமிழக அரசு பங்கு மூலதனமாக, ரூ.25 கோடியும்‌, பஞ்சு சுழற்சி நிதியாக ரூ.2.07 கோடியும்‌, வழங்கியுள்ளது. 

டான்ஸ்பின்‌ நிறுவனமானது, தற்பொழுது இயங்கி வரும்‌ 6 கூட்டுறவு நூற்பாலைகளுக்கு பஞ்சு கொள்முதல்‌ செய்வதற்காக ரூ.11.49 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. இவ்விணையம்‌ 2023-24 ஆம்‌ ஆண்டில்‌ ரூ.4147.00 இலட்சம்‌ உத்தேச இலாபம்‌ ஈட்டியுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகளின்‌
இணையம்‌ லிமிடெட்‌ (டான்ஸ்பின்‌), சென்னை

SI.No. Detail 2019-20
(தனிக்கை)
2020-21
(தனிக்கை)
2021-22
(தனிக்கை)
2022-23 2023-24
1 பெறப்பட்ட சேவைக்‌ கட்டணம்‌ மற்றும்‌ இதர வருமானம்‌ (ரூபாய் இலட்சத்தில்‌) 150.00 இலட்சம் 177.35 இலட்சம் 172.75 இலட்சம் 150.00 இலட்சம்
(தனிக்கைக்கு முன்‌)
162.00 இலட்சம்
(தனிக்கைக்கு முன்‌)
2 நிகர இலாபம்‌/நட்டம்‌ (ரூபாய் இலட்சத்தில்‌) (+) 114.23 இலட்சம் (+)111.68 இலட்சம் (+)128.16 இலட்சம் (+)90.35 இலட்சம்
(தனிக்கைக்கு முன்‌)
(+)117.00 இலட்சம்
(தனிக்கைக்கு முன்‌)

Let’s Get In Touch


    -+=