ஜவுளி ஊக்குவிப்புப் பிரிவு

ஜவுளி ஊக்குவிப்புப் பிரிவு

தமிழகத்தில் ஆடை மற்றும் ஜவுளித் தொழிலின் வளர்ச்சியை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு ஜவுளித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், ஜவுளி ஊக்குவிப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.

ஜவுளி ஊக்குவிப்பு பிரிவின் நோக்கங்கள்

ஜவுளி ஊக்குவிப்பு பிரிவின் வழிமுறைகள்

தகவல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல்

ஜவுளி ஊக்குவிப்பு பிரிவு தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்ப ஜவுளிகள் உட்பட, சந்தை ஜவுளித் தொழிலின் நிலவரங்கள் விதிமுறைகள் மற்றும் நிதி வாய்ப்புகள் உள்ளிட்ட ஜவுளித் தொழிளின் விரிவான தகவல்களை தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வழங்கும். மேலும் தொழில்முனைவோர் தங்கள் வணிகத் திட்டங்களையும் உத்திகளையும் உருவாக்குவதற்கான ஆலோசனை சேவைகளை ஜவுளி ஊக்குவிப்பு பிரிவு வழங்கும்.

தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவித்தல்

புதிய தயாரிப்புகள், செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஜவுளித் தொழிலில் புதுமைக்கு ஆதரவளிக்கும்

பிணைப்பு மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குதல்

ஜவுளி ஊக்குவிப்பு பிரிவு தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை அணுக உதவும். மேலும் இப்பிரிவு சந்தை நுண்ணறிவை வழங்குவதோடும் மற்றும் சந்தை நுழைவு உத்திகளை வளர்ப்பதில் தொழில்முனைவோருக்கு உதவிபுரியும்.

புதுமையை ஆதரித்தல்

புதிய தயாரிப்புகள், செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஜவுளித் தொழிலில் புதுமைக்கு துணைபுரியும். தொழில்முனைவோருக்கு தொழில்நுட்ப உதவியை அணுகுவதற்கும், அவர்களின் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் ஜவுளி ஊக்குவிப்பு பிரிவு உதவிபுரியும்.

சந்தை அணுகலை எளிதாக்குகிறது

ஜவுளி ஊக்குவிப்பு பிரிவு தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை அணுக உதவும். செல் சந்தை நுண்ணறிவை வழங்கும் மற்றும் சந்தை நுழைவு உத்திகளை உருவாக்க தொழில்முனைவோருக்கு உதவும்.

தமிழகத்தில் ஜவுளித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில்,

07.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற 5வது உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு (GIM- 2024)-ன் போது 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

11.11.2022 அன்று சென்னையில் நடைபெற்ற முதல் தொழில்நுட்ப ஜவுளி மாநாட்டின் போது 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

23.03.2023 அன்று சென்னையில் நடைபெற்ற PM மித்ரா மாநாட்டின் போது 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

-+=